search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு தாக்கல்"

    • அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டம்.
    • விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக, மீண்டும் அனுமதி கேட் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தவெக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.

    அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி, பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று வெளியிட்டிருந்த நிலையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
    • விஜய பிரபாகரன் இடையே முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்தது.

    டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்துள்ளார்.

    விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் தொடர்பாக புகார் அளிக்க விஜய பிரபாகரன் டெல்லி சென்றுள்ளார்.

    இதுதொடர்பாக, சற்று நேரத்தில் தேர்தல் ஆணையரை சந்தித்து விஜய பிரபாகரன் மனு அளிக்க உள்ளார்.

    அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜய பிரபாகரன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    ஒவ்வொரு சுற்றுக்கும் மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரன் இடையே முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்தது.

    • வரும் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ளது.
    • மனுவில் உடல்நலம் காரணம் காட்டி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார சிறையில் அடைக்கப்பட்டார்.

    தேர்தல் காரணமாக ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    வரும் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று உடல்நலம் காரணம் காட்டி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தள்ளார்.

    • பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்.
    • மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் வருகிறது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    எந்தக் காரணமும் இல்லாமல் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என கேசவ விநாயகம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும எந்த தொடர்பும் இல்லை எனவும் கேசவ விநாயநகம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் வருகிறது.

    • தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதி, 25 பாராளுமன்ற தொகு திகளுக்கு வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மல்காஜ்கிரி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 114 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்தால் இந்த தொகுதியில் 8 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்

    குறைந்தபட்சமாக அடிலாபாத் தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிக ளுக்கு மொத்தம் 5460 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 25 பாராளுமன்ற தொகுதி களுக்கு 965 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    இன்று மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட உள்ளன.

    வருகிற 29-ந் தேதிக்குள் வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    • காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி.
    • வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது.
    • பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். கடல் வளத்தை பாதுகாக்கவும் கடல் அரிப்பைத்தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவும் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா சங்கம் செயல்படுகிறது.
    • 29ந் தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    திருப்பூர் :

    உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர் 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா எனப்படும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் செயல்படுகிறது.இச்சங்கத்தில் ஒரு தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள், 2 இணைச் செயலாளர் பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.தேர்தல் நடத்தி மட்டுமே 2022 -25க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஒருதரப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கடந்த 10ந் தேதி கூடிய சைமாவின் அவசர செயற்குழுவில் வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.வருகிற 29ந்தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    நாளை 19-ந்தேதி முதல் ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் வேட்பு மனு வழங்கப்படுகிறது.மனு தாக்கலுக்கு 21ந் தேதி கடைசிநாள். 25-ந் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டு, 26-ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.போட்டி உள்ள பதவிகளுக்கு மட்டும் 29ந் தேதி சைமா அலுவலகத்தில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்தல் நடத்தப்படும்.

    வேட்பு மனு பூர்த்தி செய்து 2 நகல்களை சமர்ப்பிக்கவேண்டும். ஒரு நகலில் தேர்தல் அதிகாரியின் ஒப்புகை பெற்றுக்கொள்ளவேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்பவர், முன்மொழிபவர், வழிமொழிபவர்கள் சங்கத்துக்கு எந்த நிலுவை தொகையும் வைத்திருக்க கூடாது. புதிய உறுப்பினர் எனில் சந்தா தொகை செலுத்திய நாளில் இருந்து ஓராண்டு உறுப்பினராக இருத்தல் வேண்டும். சங்க ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான உறுப்பினர்கள் எந்த பதவிக்கும் போட்டியிட முடியாது.ஒருநபர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிடமுடியும். போட்டி இல்லாத பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுபவரும், வேட்பு மனு கட்டணம் செலுத்த வேண்டும்.தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சைமா சங்க தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.  

    • பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 9-ம் தேதி நடைபெறுகிறது.
    • 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பானுமதி. இவர் சமீபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த ஊராட்சியில் ஆண் வாக்காளர்கள் 921, பெண் வாக்காளர்கள் 931 பேர் என 1852 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க தரப்பில் பானுமதி மற்றும் உமா ஆகிய இருவரும், தி.மு.க தரப்பில் சுசீலா மற்றும் நீலாவதி ஆகிய இருவர் என 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

    இந்த தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலராக கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, தேர்தல் பணி மேற்பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலாளர் பிரவீன் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை 30ஆம் தேதி திரும்ப பெறலாம். அதனைத் தொடர்ந்து போட்டி இருப்பின் இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெறுகிறது.

    4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது. மே 2-ந் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகிறது. #TNAssemblyElection
    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை வேட்பாளர்களை அறிவித்தது.

    அ.தி.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் கந்தசாமி, அரவக்குறிச்சியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி, ஓட்டப்பிடாரத்தில் மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    கடந்த 26-ந் தேதி வரை மொத்தம் 98 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை. வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது.



    எனவே அ.தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மே 2-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

    அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மே 1-ந் தேதி சூலூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார். 4 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அதேபோன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனும் 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்த 4 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மே 23-ந் தேதி நடைபெறுகிறது. #TNAssemblyElection
    காந்திநகரில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு அகமதாபாத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். #AmitShah #LokSabhaElections2019
    அகமதாபாத்:

    பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், அமித் ஷா இன்று வேட்பு மனு தாக்கலுக்கு தயாரானார். இதற்காக இன்று காலை அகமதாபாத் வந்து சேர்ந்த அவர், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரது செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



    இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அமித் ஷாவின் வேட்பு மனு தாக்கல் கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும், மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்றும் மாநில பாஜக கருதுகிறது.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.  #AmitShah #LokSabhaElections2019

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. #Mullaperiyardam #SC
    புதுடெல்லி:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தமிழகத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடை இல்லை என கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை 9-ந்தேதி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மூல வழக்கில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கேரளா அரசு அங்கு கட்டுமான பணிகளை தொடங்கி இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த நவம்பர் 26-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று புதிதாக கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், முல்லை பெரியாறு அணை பகுதியில் ஏற்கனவே உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும், நீர்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அங்கு தரையை சமப்படுத்த கொட்டப்பட்ட மண்ணை அகற்ற உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Mullaperiyardam #SC

    ×